44 இடங்களில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது : பிரதமர் மோடி கணிப்பு !

  கிரிதரன்   | Last Modified : 26 Apr, 2019 10:57 pm
in-2019-general-elections-congress-is-making-a-record-of-fighting-on-the-least-number-of-seats-ever-pm-modi

தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் கூட வெற்றி பெறாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, பாஜக சார்பில், மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் இன்று பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியது: 
ஒரு காலத்தில் தொலைப்பேசி கட்டணம் என்பது, நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் சுமையாக இருந்து வந்தது.  ஆனால், மத்திய பாஜக அரசின் அதிரடி நடவடிக்கைகளால் இந்தியாவில் இன்று,  தொலைப்பேசியில் இலவசமாக பேசும் வசதியை வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர். அத்துடன் உலக அளவில் குறைந்த செலவில் மொபைல் டேட்டாவை பெற்று, உலக தரமான தொலைத்தொடர்பு சேவையை அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.

சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்ற எந்த மக்களவைத் தேர்தல்களிலும் இல்லாத அளவுக்கு, கடந்த 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகக் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது. அதாவது கடந்த தேர்தலில், முறையான எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாத அளவுக்கு வெறும் 44 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றிப் பெற்றது.

தமது இந்த மோசமான சாதனையை, இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே முறியடித்து புதிய சாதனை படைக்கும். அதாவது தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 44 இடங்களில் கூட வெற்றி  பெறாது என மோடி கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தில், பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close