பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிடவில்லை என்ற காங்கிரசின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவும், அனுபவமில்லாத வாரிசுகளை ஏற்றுக்கொள்ள முடியாது மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது முகநூலில், வாரணாசியில் பிரியங்கா போட்டியிடவில்லை என்ற காங்கிரசின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவும், புதிதாக அரசியலுக்கு வருகை தந்துள்ள வாரிசின் தலை எழுத்தை வாரணாசி எழுதி புதிய இந்தியா உருவாக வாய்ப்பு ஏற்படும் என நம்பினதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், புதிய இந்தியா அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை எனவும் அனுபவமில்லாத வாரிசுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.