4-ஆம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

  ராஜேஷ்.S   | Last Modified : 27 Apr, 2019 07:58 pm
the-4th-phase-of-the-lok-sabha-election-campaign-ended

9 மாநிலங்களில் நடைபெறவுள்ள 4-ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்வடைந்தது. 

9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு 4-ஆம் கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. பீஹார் -5, ஜம்மு-காஷ்மீர் -1, ஜார்க்கண்ட் - 3, மத்திய பிரதேசம் - 6, மகாராஷ்ட்ரா - 17, ஒடிஷா - 6, ராஜஸ்தான் - 13, உத்தரபிரேதசம் - 13, மேற்கு வங்கம் - 8 ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

3-ஆம் கட்ட தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்ததால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4-ஆம் கட்ட தேர்தலில் மொத்தம் 936 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேற்குறிப்பிட்ட 71 தொகுதிகளிலும் 1.40 லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close