பிரதமர் பதவிக்கு ராகுலை விட இவர்கள் தான் 'பெஸ்ட்' - சரத் பவார் அதிரடி!

  முத்துமாரி   | Last Modified : 28 Apr, 2019 10:22 am
sharad-pawar-backs-mamata-banerjee-mayawati-and-chandrababu-naidu-for-pm-post

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியை விட, சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகிய 3 பேரும் தான் தகுதியானவர்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். 

அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

2019 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக, தோராயமாக நூறு இடங்களை மட்டுமே கைப்பற்றும். அப்படியே அதற்கு அதிகமாக பெற்றாலும், தனிப்பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.  எனவே அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணியில் நாம் இறங்க வேண்டும். 

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது சரியல்ல. ஒரு தேசிய கட்சியின் தலைவரை விட, மாநிலத்தின் தலைவர்கள் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர்களாக இருப்பார்கள். அதன்படி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகிய மூன்று பேருமே பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள். இவர்களில் ஒருவரைத் தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். 

நான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியாது. அதனை ராகுல் காந்தி தெளிவாகக் கூறிவிட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சி மொத்தம் 22 இடங்களில் போட்டியிடுகிறது. மொத்தமாக அத்தனை இடங்களில் வெற்றி பெற்றால் கூட, நான் பிரதமர் வேட்பாளராக இருக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close