சாதி அரசியல் செய்யவில்லை மோடி: பிரியங்காவுக்கு அருண் ஜெட்லி பதிலடி !

  டேவிட்   | Last Modified : 29 Apr, 2019 08:09 am
arun-jaitley-replied-to-priyanka

பிரதமர் நரேந்திர மோடி, என்றைக்குமே சாதி அரசியல் செய்ததில்லை எனவும், அவர் வளர்ச்சி அரசியலில்தான் ஈடுபட்டுள்ளார் எனவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். 

தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என பிரதமர் மோடி பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், பிரியங்கா, உள்ளிட்டோர் விமர்சித்து இருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி, என்றுமே சாதி அரசியல் செய்ததில்லை எனவும், தேசியத்தால் கவரப்பட்ட மோடி, வளர்ச்சி அரசியலில்தான் ஈடுபட்டுள்ளார் எனவும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.  மேலும், மற்ற கட்சிகளின் தலைமை குடும்பங்களின் சொத்துகளுடன் ஒப்பிடும்போது, பிரதமரின் சொத்து மதிப்பு வெறும் 0.01 சதவீதம்தான் எனவும் இவ்வாறு அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close