மும்பை- ஆர்வமுடன் வாக்களித்த பூனம் மஹாஜன், அனில் அம்பானி

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Apr, 2019 12:20 pm
anil-ambani-mahajan-matondkar-rekha-cast-vote-in-mumbai

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த வாக்கு பதிவில், பாஜக எம்பி பூனம் மஹாஜன், தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகை ரேகா ஆகியோர் காலையிலேயே ஆர்வமுடன் வாக்களித்தனர்.

4-வது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் இன்று 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த வாக்கு பதிவில், பாஜக எம்பி பூனம் மஹாஜன், காங்கிரஸ் வேட்பாளர் ஊர்மிளா மன்டோட்கர், தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகை ரேகா ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் மக்களை தேர்தல் முதல் கட்டமாக கடந்த 11ம் தேதி 7 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 18ம் தேதி 10 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக 23ம் தேதி 14 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close