நாடு முழுவதும் மாேடி அலை: பியூஷ் கோயல் நம்பிக்கை

  Newstm Desk   | Last Modified : 29 Apr, 2019 01:34 pm
modi-wave-will-workout-in-this-election-piyush-goel


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச் சாவடியில் தன் வாக்கை பதிவு செய்த, மத்திய அமைச்சர் பியூஷ் காேயல், நாடு முழுவதும் மாேடி அலை மிக வேகமாக வீசுவதாகவும், தேர்தலில் பா.ஜ., மிகப் பெரிய வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், மத்திய அமைச்சர் பியூஷ் காேயல் வாக்களித்தார். 

பின் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில், மாேடி அலை பலமாக வீசுகிறது. மத்திய அரசுக்கு ஆதரவாகவே மக்கள் மனநிலை இருப்பதை உணர்கிறேன். இந்த தேர்தலில், பா.ஜ., மிக பிரமாண்டமான வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் பிரதமர் மாேடி தலைமையிலான ஆட்சி அமையும்’’ என்றார். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close