கலவரத்தில் களம் இறங்கிய திரிணமுல் காங்., தொண்டர்கள்

  Newstm Desk   | Last Modified : 29 Apr, 2019 02:39 pm
major-clashes-between-tmc-and-bjp-workers-in-wb

மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில், திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட முயன்றதால் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், பாரதிய ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு, குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெறுவதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டனர். 

அதன் பலனாக, மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் என கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இதனால், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா இடையே பல இடங்களில் மாேதல் போக்கு நிலவுகிறது. 

குறிப்பாக, பிர்பூம், அசன்சாேல் உள்ளிட்ட பகுதிகளில் கடும் கலவரம் ஏற்பட்டது. பிர்பூமில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மத்திய படையினர் இல்லாததால், அங்கு கும்பலாக வாக்களிக்க வந்த திரிணமுல் காங்கிரசாரை, பாரதிய ஜனதாவினர் தடுத்து நிறுத்தினர். 

இதனால், ஆத்திரம் அடைந்த திரிணமுல் காங்., பெண் தொண்டர்கள், கையில் உருட்டு கட்டை, ஆயுதங்களுடன் வாக்குச்சாவடியை முற்றுகையிட முயன்றனர். அவர்களை பா.ஜ.,வினர் தடுத்து நிறுத்த முயன்றதால், இரு தரப்பினரிடையே மாேதல் போக்கு நிலவியது. 

இதையடுத்து, அங்கு வந்த போலீசார், இரு தரப்பினருடனும் பேச்சு நடத்தி, சமாதானம் செய்ய முயன்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close