40 எம்.எல்.ஏ.,க்கள் எங்கள் பக்கம்: முதல்வரை கலங்கடித்த பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 29 Apr, 2019 03:50 pm
pm-modi-said-that-40-tmc-mla-s-ready-to-join-bjp

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மாேடி, அந்த மாநிலத்தை ஆளும், திரிணமுல் காங்கிரசை சேர்ந்த, 40 எம்.எல்.ஏ.,க்கள் இன்றும் தன்னுடன் தொடர்புடன் இருப்பதாக கூறினார். மே 23ல் தேர்தல் முடிவுகள் வெளியானதும், அவர்கள் அனைவரும் மம்தா தலைமையிலான ஆட்சியை புறகணித்துவிட்டு, தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்றும் அவர் கூறினார். 

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். அந்த மாநிலத்தில் எப்படியும் பா.ஜ.,வை காலுான்ற செய்யும் முயற்சியில் கட்சித் தலைமை தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்நிலையில், சாேரம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மாேடி பேசியதாவது:

நாடு முழுவதும் பா.ஜ., அலை வீசி வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பின், நாலாபுறமும் தாமரை மலரும். இன்றும், திரிணமுல் காங்கிரசை சேர்ந்த, 40 எம்.எல்.ஏ.,க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். மே 23 தேர்தல் முடிவுகள் வெளியானதும், அவர்கள் அனைவரும், மம்தாவை விட்டு எங்கள் பக்கம் வந்துவிடுவர். ஏனென்றால், மம்தா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close