ராணுவத்தை குறை கூறியவர் மாேடிக்கு எதிராக களம் இறக்கம்

  Newstm Desk   | Last Modified : 29 Apr, 2019 05:00 pm
ex-bsf-jawan-tej-bhagadur-yadav-contesting-election-against-pm-modi-and-sp-gives-him-seat

நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினருக்கு, தரமற்ற உணவு வழங்கப்படுவதாக, சமூக வலைதலங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, பி.எஸ்எப்., முன்னாள் வீரர் தேஜ் பகதுார் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் சார்பில், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மாேடிக்கு எதிராக களம் இறக்கப்பட்டுள்ளார். 

பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணயாற்றியவர் தேஜ் பகதுார் யாதவ். 2017ம் ஆண்டு, அவர் பணியில் இருந்த போது, சீருடையுடன் ஓர் வீடியோ  பதிவை வெளியிட்டார். அதில், ராணுவம், துணை ராணுவப் படையினருக்கு மிக மாேசமான, தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். 

இந்த வீடியோ பதிவு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, யாதவிடம் நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையின் போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில், மக்களவை தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மாேடியை எதிர்த்து, தான் போட்டியிட உள்ளதாக யாதவ் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து, தேஜ் பகதுார் யாதவை, தங்கள் கட்சியின் சார்பில், வாரணாசியில் களம் இறக்குவதாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. 

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியின் சார்பில் ஏற்கனவே களம் இறக்கப்பட்ட வேட்பாளர், தன் வேட்பு மனுவை திரும்பப் பெறுவார் என்றும், அந்தக் கட்சி அறிவித்துள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close