மக்களவை தேர்தல் 4ம் கட்ட ஓட்டுப்பதிவில் 64 சதவீத வாக்குகள் பதிவு

  Newstm Desk   | Last Modified : 29 Apr, 2019 08:02 pm
loksabha-election-64-percent-polling-in-4th-phase

நாட்டின் 9 மாநிலங்களில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட ஓட்டுப்பதிவில், 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

நாடு முழுவதும், மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, ஏற்கனவே, 3 கட்ட ஓட்டுப்பதிவுகள் நடத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இன்று 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் சராசரியாக, 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இன்று மாலை 6 மணி நிலவரப்படி, பீஹார் - 53.6; ஜம்மு - காஷ்மீர் - 9.7; மத்திய பிரதேசம் - 65.8; மஹாராஷ்டிரா - 51.06; ஒடிசா - 64.05; ராஜஸ்தான் - 62.86; உத்தர பிரதேசம் - 53.12; மேற்கு வங்கம் - 76.47 மற்றும் ஜார்க்கண்ட் - 63.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சராசரியாக, 50.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close