திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு !

  Newstm Desk   | Last Modified : 29 Apr, 2019 09:00 pm
ec-orders-fir-against-babul-supriyo-for-trespassing-into-poll-booth

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், தற்போதைய எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  பாபுல் சுப்ரியோ, மேற்கு வங்க மாநிலம், அசன்சோல் தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். இவர் தற்போது மீண்டும் அதே தொகுதி போட்டியிடுகிறார்.

அசன்சோல் உள்பட மேற்கு வங்கத்தில் எட்டு மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது தமது தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்குள் பாபுல் சுப்ரியோ அத்துமீறி நுழைந்ததுடன், தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாகவும், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், பாபுல் சுப்ரியோ மீது வழக்குப்பதிவு செய்யும்படி,  மேற்கு வங்க மாநில போலீஸாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

"திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை வாக்குச்சாவடி அருகே செல்லவிடாதபடி, பாஜக முகவர்கள்  தடுத்தாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முயற்சிகள் நடைபெறுவதாகவும் தகவல் வந்தது. இதையடுத்துதான் தான் குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு சென்றேன்" என்று பாபுல் சுப்ரியோ தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close