இங்கதான் பிறந்து வளர்ந்தார் ராகுல் காந்தி - பிரியங்கா வத்ரா விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2019 03:53 pm
all-knows-rahul-gandhi-was-born-in-india-priyanka-vadra

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்குதான் பிறந்து வளர்ந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அவரது சகோதரியுமான பிரியங்கா வத்ரா தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு பிரிட்டன் குடியுரிமை இருப்பதாக பாஜக எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக 15 தினங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இந்நிலையில், ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியிடம் இதுகுறித்து கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “ராகுல் காந்தி ஹிந்துஸ்தானைச் சேர்ந்தவர்தான் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். அவர் இங்குதான் பிறந்து வளர்ந்தார். இது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது குடியுரிமை குறித்து கேள்வி எழுப்புவது அபத்தமானது’’ என்றார் பிரியங்கா வத்ரா.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close