ம.பி. காங்கிரஸ் அரசுக்கான ஆதரவு வாபஸ் ஆகலாம் - மாயாவதி எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2019 04:07 pm
we-may-reconsider-the-support-to-madya-pradesh-cong-govt-mayawati

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகின்ற லோகேந்திர சிங் ராஜ்புத், திடீரென்று அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். இதனால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆவசேமடைந்துள்ளார். மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

230 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் 114 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். தனிப் பெரும்பான்மை இல்லாத சூழலில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close