தேர்தலை ஒத்தி வைக்கக் கோரும் முதல்வர்!

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2019 05:00 pm
odisha-cm-urges-election-commission-to-postpond-the-polls

ஒடிஸா மாநிலத்தில் ஃபனி புயலால் பாதிக்கப்படும் இடங்களில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் 4 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஃபனி புயல் ஒடிஸா அருகே கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் டெல்லி சென்றுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

ஃபனி புயல் தாக்கினால், பட்குரா சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் நவீன் பட்நாயக் முன்வைக்கவுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close