பிரதமர் பக்கோடா விற்க சொன்னது இதற்காகத்தான் – அகிலேஷ் யாதவின் புதிய குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2019 05:25 pm
akilesh-yadav-jibes-pm-modi-for-asking-youth-to-sell-pakoda

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கான உற்பத்தியாளர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே இளைஞர்களை பிரதமர் மோடி பக்கோடா விற்க சொன்னார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், புதுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாட்டின் வேலைவாய்ப்பு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் ஒரு சமயம் மத்திய அரசை விமர்சித்தபோது, இளைஞர்கள் நிறைய பேர் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பை வழங்கியுள்ளோம்; பக்கோடா விற்பது கூட நல்ல தொழில்தான் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கும் அப்போது விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, “இளைஞர்கள் பக்கோடா விற்க வேண்டும் என்றார் பிரதமர் மோடி. படித்து முடித்த பின் நீங்கள் பக்கோடா வியாபாரியாகவோ, காவலராகவோ வர விரும்புகிறீர்களா? பக்கோடா விற்கச் சொன்னதில் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. இதன் மூலமாக, வெளிநாடுகளில் இருந்து வரும் எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு எண்ணெயில் பகோடா தயாரிக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. அப்போதுதான் அவர்களது நண்பர்கள் செழிப்படைய முடியும். ஆனால், கடுகு எண்ணெயை கொண்டு பக்கோடா தயாரித்தால் உள்நாட்டு விவசாயிகள் பலனடைவர்’’ என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close