பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது - ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2019 05:46 pm
election-defeat-is-visible-on-pm-modi-s-face-rahul-gandhi

பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.


மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் அவர் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ”தன்னைத் தானே காவலர் என சொல்லிக் கொள்பவர்கள் விமானங்களில் சுற்றித் திரிகின்றனர். ஆனால், விவசாயிகள் தங்கள் பயிர்களைக் காக்க வேண்டி இரவு நேரங்களில் வயல்களில் தங்க வேண்டியுள்ளது. விவசாயிகள் அல்லது வேலையற்ற இளைஞர்களின் வீடுகளுக்கு முன்னால் எந்தவொரு காவலரையாவது பார்த்திருக்கிறீர்களா? அனில் அம்பானி, அதானி போன்ற தொழில் அதிபர்களின் வீடுகளுக்கு வெளியேதான் அவர்கள் இருப்பார்கள். நான் காவலராக இருக்க விரும்பவில்லை. நான் மக்களின் ஆணைக்கிணங்க செயல்பட விரும்புகிறேன்.
மக்களவைத் தேர்தல் பாதி முடிந்துவிட்ட நிலையில், பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அவரது முகம் சுருங்கிப்போய் உள்ளது’’ என்றார் ராகுல் காந்தி.


newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close