டீ கடைக்காரர் டெல்லி மேயரானார்!

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2019 06:17 pm
bjp-councillor-who-used-to-sell-tea-elected-north-delhi-mayor

டெல்லியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று வார்டு கவுன்சிலராக தேர்வான, அவதார் சிங், வடக்கு டெல்லியின் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்த இவர், தன் விடா முயற்சியால், வடக்கு டெல்லி மேயராத தேர்வாகியுள்ளார். 

டெல்லியை சேர்ந்த சீக்கியர் அவதார் சிங். இளம் வயது முதலே வறுமையில் வாடிய இவர், நட்சத்திர ஓட்டலில் பெல் பாயாக பணியாற்றினார். அதன் பின், தன் சொந்த முயற்சியில் டீக்கடை துவங்கி, வியாபாரம் செய்து வந்தார். அதன் பின், வடக்கு டெல்லியில் தான் வசிக்கும் பகுதி மக்களிடையே மிகவும் மென்மையாக நடந்து கொண்டதால், அனைவரின் அன்பையும் பெற்றார். 

இவரது அயராத உழைப்பும், நேர்மையும், இனிமையாக பழகும் குணமும், அப்பகுதி மக்களை கவர்ந்தது. இதனால், அங்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, வார்டு கவுன்சிலராக தேர்வானார். பட்டியல் இனத்தை சேர்ந்த சீக்கியரான அவதார் சிங், அந்த கட்சித் தலைமையால், மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். 

இவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால், வடக்கு டெல்லி மேயராக போட்டியின்றி தேர்வானார். பட்டியல் இனத்தை சேந்த சீக்கியர் ஒருவர், டெல்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். அவருக்கு பா.ஜ., தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, அவதார் சிங், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close