தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த முதல்வர் கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2019 07:13 pm
maharashtra-cm-writes-letter-to-election-commission

மஹாராஷ்டிராவில், கடும் கோடையின் தாக்கத்தால் நிலவும் வறட்சியை போக்க, நலத்திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தும்படி, மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் கமிஷனுக்கு, முதல்வர் பட்னவிஸ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மஹாராஷ்டிராவில், அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. மாநிலத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்திருப்பதால், கடும் வறட்சி நிலவுகிறது. மாநிலத்தில் மாெத்தம், 151 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. 

மாநிலத்தில் வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்காகவும், மத்திய அரசு, 4,714 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால், மக்கள் நலன் கருதி, தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தும் படி கோரிக்கை விடுக்கிறேன். 

அப்படி செய்தால் தான், ஆழ்துளை கிணறு அமைத்தல், போர்வெல்களின் ஆழத்தை அதிகரித்தல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரத்திற்கான பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றை செய்ய முடியும். 

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 

nestm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close