பிரதமர் மோடியின் உரையில் விதிமீறல் எதுவுமில்லை: தேர்தல் ஆணையம்

  கிரிதரன்   | Last Modified : 30 Apr, 2019 10:00 pm
pm-s-speech-in-maharashtra-doesn-t-violate-model-code-election-commission

தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி பேசியதில், தேர்தல் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், வார்தாவில் பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, " கட்சித் தலைவர்கள் சிலர் தேர்தலில், ஹிந்துக்கள் அதிகமுள்ள தொகுதிகளில் போட்டியிட பயந்துக் கொண்டு, ஹிந்து சமூகத்தினர் குறைவாக உள்ள இடங்களுக்குச் சென்று போட்டியிடுகின்றனர்" என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம், வயநாட்டில் போட்டியிட்டுள்ளதை மறைமுகமாக விமர்சித்தார்.

பிரதமரின் இந்தப் பேச்சு வெறுப்புணர்வு மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் உள்ளதென, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம்,  தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் பேசியதில், தேர்தல் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அளித்துள்ள அறிக்கை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஆராய்ந்த பின்பே, ஆணையம் இந்த முடிவுக்கு வந்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close