அயோத்தில் பிரதமர் மாேடி பிரசாரம்

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 12:41 pm
modi-rally-at-ayodhya

தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மாேடி, உத்தர பிரதேச மாநிலம் அயோத்யா சென்றடைந்தார். அங்கு, அவர் தலைமையில் இன்று பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள் அடங்கிய பிரமாண்ட பேரணி நடைபெறவுள்ளது. 

கடந்த, 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, ராமஜென்மபூமி அமைந்துள்ள அயாேத்யாவில், நரேந்திர மாேடி பிரசாரம் செய்தார். இந்நிலையில், வாரணாசி தொகுதியில் பா.ஜ., சார்பில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் மாேடி, தேர்தல் பிரசாரத்திற்காக அயோத்யா சென்றுள்ளார். 

அவர் தலைமையில், பா.ஜ., முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடைபெறவுள்ளது. அம்பேத்கர், ராம் மனோகர் லோஹியா ஆகியோரின் தொடர்புடைய இந்த நகரத்திற்கு வந்ததில் மிகுந்த பெருமை அடைகிறேன் என பிரதமர் மாேடி பேசினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close