நாட்டை பிளவு படுத்த நினைக்கும் சக்திகளுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவளித்து வருகிறார் என்று பாஜக தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இன்றைக்கு நாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம். நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார். இனிவரும் நாள்களிலும் அவரே பிரதமராக நீடிப்பார். அதே சமயம், பாஜக அச்சாணியாக இல்லாது போனாலும், காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பதை எங்கள் தொண்டர்கள் உறுதி செய்வார்கள்.
ஆனால், நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு மம்தா பானர்ஜி ஆதரவளித்து வருகிறார். காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று சொன்ன ஒமர் அப்துல்லாவின் கோரிக்கை குறித்த தனது நிலைப்பாடு என்னவென்பதை மம்தா பானர்ஜி தெரிவிக்க வேண்டும் என்றார் அமித் ஷா.
newstm.in