பயங்கராவதிகளின் வீடு புகுந்து தாக்குதல் நடத்துவோம்: பிரதமர் மாேடி ஆவேசம்

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 05:48 pm
modi-speech-at-ayodhya

உத்தர பிரதேச மாநிலம் அயோத்யாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மாேடி, நாட்டை அழிக்க நினைக்கும் பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும், அவர்களின் வீடு புகுந்து தாக்கி அழிப்போம் என ஆவேசமாக பேசினார் .

மக்களவை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, உத்தர பிரதேச மாநிலம் அயோத்யாவில் நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மாேடி பங்கேற்று பேசியதாவது: 

மத்திய பா.ஜ., அரசின் ஆட்சி காலத்தில், நாடு மிகவும் பாதுகாப்பாக உள்ளது. நம் மீது தாக்குதல் நடத்திய பயங்ரவாதிகள் கூண்டோடு அழிக்கப்பட்டுள்ளனர். தேசத்தின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. 

பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் அவர்களின் வீடு தேடி சென்று, அவர்களின் வீட்டிற்குள்ளேயே நுழைந்து தாக்கி அழிப்போம். பாதுகாப்பான தேசத்தில் மட்டுமே வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியும். 

நீங்கள் தேர்தலில் வாக்களிக்கும் போது, வாக்குப் பதிவு இயந்திரத்தில், தாமரை சின்னத்தை அழுத்தும் போது, உங்களுக்குள் இருக்கும் ராணுவ வீரன் விழித்தெழுவான். நாட்டிற்காக போராடவும், தன்னுயிரை தியாகம் செய்யவும் துணியும் வீரன் வெளிப்படுவான். 
இவ்வாறு அவர் பேசினார். 

அம்பேத்கர்நகர் மக்களவை தொகுதியில் வரும் அயோத்யாவில் பிரசாரம் செய்த மாேடி, ராமர் கோவில் பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதுகுறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், தன் பேச்சை முடிக்கும் போது, ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என முடித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close