யோகி ஆதித்யநாத்துக்கு லேப்டாப் பயன்படுத்த தெரியாது - அகிலேஷ் யாதவ்

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 06:15 pm
yogi-adidyanath-does-nt-know-to-operate-a-laptop-akilesh-yadav

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு லேப்டாப் கூட பயன்படுத்த தெரியாது என்று முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் விமர்சித்தார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு லக்னௌவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், தற்போதைய பாஜக முதல்வர் யோகிக்கு, லேப்டாப்பை எப்படி பயன்படுத்துவது என்பதே தெரியாது என்றும், அதனால்தான் இலவச லேப்டாப் திட்டத்தை அவர் செயல்படுத்தவில்லை என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close