காங்கிரஸ் என்னை கொல்ல விரும்புகிறது :  மோடி பகிரங்க குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 09:05 pm
congress-hates-me-wants-me-killed-pm-modi

காங்கிரஸ் கட்சி தமக்கெதிராக வெறுப்பு அரசியலை நடத்தி வருவதுடன், தம்மை கொல்லவும் விரும்புகிறது என பிரதமர் நரேந்திர மோடி பகிங்கரமாக குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், இட்டார்சி எனுமிடத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேசத்தின் ஒட்டுமொத்த மக்களே எனக்கு ஆதராக உள்ளனர். இதை புரிந்துக் கொள்ளாமல், காங்கிரஸ் கட்சி எனக்கு எதிராக வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது. அத்துடன், என்னை கொல்ல வேண்டும் என விரும்பி, கனவும் கண்டு வருகிறது.

காங்கிரஸ் எல்லா நிலையிலும் நேர்மையற்ற கட்சியாக உள்ளது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், ஊழலும்,  குடும்ப அரசியலும்தான். அனைத்து நிலையிலும் தேசத்தை முன்னேற்ற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கி வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close