இது இந்தியாவுக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி : மோடி பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 09:37 pm
unsc-has-listed-masoodazhar-as-a-global-terrorist-in-our-fight-against-terrorism-it-is-a-big-victory-pm-modi

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூர் இன்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மேலும் பேசியதாவது:

ஜெய்ஷ் -இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு சபை  இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர், சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நமக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி இது என்று பிரதமர் மோடி பெருமித்துடன் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close