ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் தாமதமாகலாம்?

  Newstm Desk   | Last Modified : 02 May, 2019 11:19 am
jammu-kashmir-s-assembly-elections-may-be-delayed

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது கால தாமதம் ஆகக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு தற்போது குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த மாநிலத்தில், வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மே 23-ஆம் தேதி மத்தியில் அமையவுள்ள புதிய அரசு, குடியரசுத்தலைவர் ஆட்சியை நீட்டிப்பது என முடிவெடுத்தால், அதன்படி அமல்படுத்தப்படும் என தெரிகிறது. அதே சமயம், குடியரசுத்தலைவர் ஆட்சியை நீட்டிக்க வேண்டாம் என புதிய அரசு கருதுமேயானால், அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்தையே சேரும். இருப்பினும், இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வது என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close