சாத்வி பிரக்யா சிங் பிரசாரம் செய்ய 72 மணி நேரம் தடை

  Newstm Desk   | Last Modified : 02 May, 2019 12:28 pm
ec-ban-sadhvi-prakya-s-campaign-for-72-hours

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங், பிரசாரம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத அடிப்படையில் வாக்கு சேகரித்தது, நன்னடத்தை விதிகளை மீறிப் பேசியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு தொடங்கி இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.

பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பேரணி செல்வது, ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது, தேர்தல் தொடர்பான விஷயங்களை மையமாக வைத்து ஊடகங்களில் தோன்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கு 3 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் இருந்த அவமானச் சின்னத்தை இடித்து தள்ளயதில் பெருமை அடைகிறேன் என்று பேட்டி ஒன்றில் சாத்வி பேசியதை அடிப்படையாகக் கொண்டு, அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close