தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகள் : பிரியங்காவுக்கு நோட்டீஸ்

  முத்து   | Last Modified : 02 May, 2019 09:19 pm
rahul-does-not-violate-rule-notices-to-priyanka-gandhi

தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகள் முழக்கமிட்டு சென்றது தொடர்பாக விளக்கமளிக்க கோரி, உத்தரப் பிரதேச மாநில (கிழக்கு) காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேராவுக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா வதேரா நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அந்த பிரசாரத்தில் சிறுவர், சிறுமிகள் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியப்படி செல்வது போன்ற வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மூன்று நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று, பிரியங்கா வதேராவுக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விதிமீறல் இல்லை: இதனிடையே, தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி விதிகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  நடத்தை விதிகளை மீறி பேசியதாக, அவர் மீது பாஜக புகார் அளித்தது. இந்த நிலையில், ராகுல் காந்தி பேச்சில் விதிமீறல்கள் எதுவுமில்லை என தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close