மே 24-இல் வெளியாகிறது ‘பிரதமர் நரேந்திர மோடி’ திரைப்படம்

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 10:37 am
pm-modi-movie-will-be-released-on-may-24

‘பிரதமர் நரேந்திர மோடி’ என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம், வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மே 23ம் தேதி, தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் இப்படம் திரைக்கு வருகிறது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை நாடெங்கிலும் கடந்த மாதம் 11ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி, அப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பாளர்கள் வழக்கு தொடுத்தனர். எனினும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவில் உச்சநீதிமன்றம் தலையிடவில்லை.

இத்தகைய சூழலில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23ம் தேதிக்கு பின்னர் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close