ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் - சூரத் நீதிமன்றம் சம்மன்

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 11:01 am
surat-court-issues-summon-to-rahul-gandhi-over-modi-surname-remarks

அனைத்து திருடர்களுக்கும் மோடி என்ற துணைப்பெயர் இருப்பது ஏன் என்று பேசியது தொடர்பாக அடுத்த மாதம் 7ம் தேதி நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கர்நாடக மாநிலம், கோலாரில் கடந்த மாதம் 13ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரம் கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசியபோது, “நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் மோடி என்பது துணைப்பெயராக உள்ளது. அனைத்து திருடர்களுக்கும் மோடி என்பது துணைப்பெயராக இருப்பது எப்படி?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தப் பேச்சுக்கு எதிராக, ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி அந்த வழக்கை தொடுத்துள்ளார். இதில், ஜூன் 7ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close