இரண்டாம் லாலு நான்தான் - தேஜ் பிரதாப் யாதவ்

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 01:36 pm
am-second-lalu-in-bihar-tej-pratap-yadav-claiming-himself-in-a-rally

பீகார் மாநிலத்தில் இரண்டாம் லாலு பிரசாத் நான்தான் என்று அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ளார். சகோதர யுத்தம் நடத்தி வரும் இவர், அவரது தந்தையின் புகழுக்கு உரிமை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்சியின் முழு பொறுப்புகளையும் அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவ் கவனித்து வருகிறார். சகோதரனிடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கட்சியில் இருந்து வெளியேறிய லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், தனது ஆதரவாளர்கள் சிலரை அதிருப்தி வேட்பாளராக நிறுத்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், லாலுவுக்கு பிரகான அரசியல் வாரிசு நான்தான் என்பதை தேஜ் பிரதாப் யாதவ் சூசகமாகக் கூறியுள்ளார். “லாலு பிரசாத்தின் ரத்தம் நான். அவர்தான் எங்களது குரு. பீகாரில் இரண்டாம் லாலு நான்தான்’’என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close