பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ

  ஸ்ரீதர்   | Last Modified : 03 May, 2019 05:24 pm
aam-aadmi-party-mla-from-delhi-s-gandhi-nagar-joins-bjp

டெல்லி காந்திநகர் ஆம்ஆத்மி எம்எல்ஏ அனில் பாஜ்பாய் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இன்று இணைந்தார்.

பாஜக குதிரை பேரம் நடத்தி எம்எல்ஏகளை தொடர்ந்து விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த கெஜ்ரிவால் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லி காந்திநகர் தொகுதி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அனில் பாஜ்பாய் இன்று மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜபாய் நான் பல வருடங்களாக ஆம் ஆத்மி கட்சிக்கு தீவிரமாக உழைைத்தேன். ஆனால் எனக்குரிய மரியாதையை அக்கட்சி தரவில்லை. ஆதனால் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close