காங்கிரஸ் ஆட்சியில் துல்லியத் தாக்குதலா? : மோடி கிண்டல்

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 05:35 pm
pm-modi-comment-about-congress-claim-of-surgical-strikes

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எங்கு, எப்போது துல்லியத் தாக்குதல் நடைபெற்றதென யாருக்கும் தெரியாது என பிரதமர் நரேந்திர மோடி கிண்டலாக கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம், சிகாரில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:
புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத்  தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாலக்காட்டில் அமைந்திருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதலில் இத்தாக்குதல் குறித்து கேலி பேசின. அதன் பின்னர் துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரங்களைக் கேட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.  தற்போது, நாங்களும் தான் துல்லியத் தாக்குதல்களை நடத்தினோம் என காங்கிரஸார் கூறி வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எங்கே? எப்போது? துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது என, பயங்கரவாதிகளுக்கும் தெரியாது. பாகிஸ்தானுக்கும் தெரியாது. இந்தியர்களாகிய நமக்கும் தெரியவில்லை. இப்படி யாருக்கும் தெரியாமல் எப்படி துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதென புரியவில்லை என பிரதமர் மோடி கிண்டலாக கூறினார்.

காங்கிரஸ்  தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மொத்தம் ஆறு முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close