சமாஜ்வாதியுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டணி- பிரதமர் மோடி பேச்சு!

  ஸ்ரீதர்   | Last Modified : 04 May, 2019 04:17 pm
samajwadi-party-has-betrayed-mayawati-modi

சமாஜ்வாதி கட்சியினருடன் காங்கிரஸ் கட்சியினர் ரகசிய கூட்டணி அமைத்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை அழிக்க நினைக்கிறது. பாவம் இது மாயாவதிக்கு தெரியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி அங்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எதிரும் புதிருமாக இருந்த இரு கட்சிகள் கூட்டு சேர்ந்து மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் ரகசிய கூட்டணி உள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சியை அழிப்பதே அவர்களின் நோக்கமாகும்.

உத்தரப்பிரதேச மக்கள் வளர்ச்சியை மட்டுமே எதிர்ப்பார்க்கின்றனர். சமாஜ்வாதி கட்சியின் நிலைப்பாட்டை அறிந்த கொள்ள பாவம் மாயாவதியால் முடியவில்லை என்று  பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close