கூத்தாடிக்கு ஓட்டு போடாதீங்க... கெஜ்ரிவால் பேச்சால் சலசலப்பு

  Newstm Desk   | Last Modified : 04 May, 2019 05:04 pm
manoj-tiwari-hits-back-after-arvind-kejriwal-s-naachta-bahaut-remark

‛கூத்தாடிக்கு ஓட்டு போடாதீங்க’ என பேசிய, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு,  நடிகரும், வடக்கு டெல்லி பா.ஜ., வேட்பாளருமான மனோஜ் திவாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளில் போட்டியிடும், ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அந்த தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளரும், போஜ்பூரி நடிகருமான மனோஜ் திவாரியை அவரது தொழிலை வைத்து விமர்சித்து பேசிய கெஜ்ரிவாலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

தேர்தல் பிரசாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால், ‛‛நடிகர் மனோஜ் திவாரிக்கு நன்கு ஆடத் தெரியும். ஆடத் தெரிந்த கூத்தாடிக்கெல்லாம் ஓட்டு போடாதீர்கள். மக்களுக்காக யார் பணியாற்றுவார்களோ அவர்களுக்கே வாக்களியுங்கள். எனவே, மனோஜ் திவாரி ஆடத் தெரிந்தவரே தவிர, அவருக்கு அரசியல் தெரியாது. அவருக்கு வாக்களித்து உங்கள் ஓட்டை வீணடிக்காதீர்’’ எனப் பேசினார். 

கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு மனோஜ் திவாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‛‛என்னை கூத்தாடி என விமர்சித்ததன் மூலம், பூர்வாஞ்சல் பகுதி மக்களை கெஜ்ரிவால் அவமதித்துவிட்டார். வரும் தேர்தலில் டெல்லி மக்கள் அவருக்கு சரியான பாடம் புகட்டுவர்’’ எனக் கூறினார். 

மனோஜ் திவாரியை, அவரது தொழில் முறை ரீதியாக அவமதித்து பேசிய கெஜ்ரிவாலுக்கு பா.ஜ., தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close