ரமலான் மாதத்தில் தாக்குதல் வேண்டாமே: பயங்கரவாதிகளுக்கு மெஹபூபா அறிவுரை

  Newstm Desk   | Last Modified : 04 May, 2019 06:13 pm
no-attacks-at-the-month-on-ramzan-mehabooba-advised-to-militants

முஸ்லிம்கள் புனிதமாக கருதும் ரமலான் மாதத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருக்க வேண்டும். அப்போது தான், முஸ்லிம்கள் நிம்மதியாக நோன்பிருந்து, தொழுகை நடத்தி, ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியும் என, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி கூறியதாவது: ‛‛ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பிருந்து, தொழுகை நடத்துவது வழக்கம். இந்த காலங்களில், அமைதியான சூழல் நிலவினால் தான், மக்கள் நிம்மியுடன் வாழ முடியும்’’

‛‛எனவே, பயங்கரவாதிகள் இந்த மாதத்தில் எவ்வித நாசவேலைகளிலும் ஈடுபடக் கூடாது. அதே சமயம், கடந்த ஆண்டைப் போலவே, மத்திய அரசும், ஜம்மு - காஷ்மீரில் கெடுபிடிகளை தளர்த்தி, சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் தான் பொதுமக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக, நிம்மதியாக தங்கள் மதம் சார்ந்த கடமையாற்ற முடியும்’’ எனக் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close