முதல்வருக்கு ‛பளார்’: தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு

  Newstm Desk   | Last Modified : 04 May, 2019 06:31 pm
chief-minister-arvind-kejriwal-slapped-by-a-man-during-roadshow-in-delhi

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்தில் ‛பளார்’ விட்ட இளைஞரின் செயலால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், டெல்லியில் அவர் இன்றும் வழக்கமான பிரசாரத்தில் ஈடுபட்ட போது, வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். 

அப்போது, முதல்வரை நெருங்கி வந்த ஒருவர், திடீரென அவரது கன்னத்தில் அறைந்தார். இதனால், கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கெஜ்ரிவாலுடன் இருந்தோர், அந்த நபரை அப்புறப்படுத்தினர். இது, அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close