ராஜீவ் குறித்த மோடியின் பேச்சுக்கு ராகுல் பதிலடி

  ஸ்ரீதர்   | Last Modified : 05 May, 2019 12:55 pm
rahul-gandhi-tweets-a-hug-to-pm-after-remarks-on-his-father-s-death

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்ததற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய மோடி, "என் மீது ராகுல் காந்தி சொல்லும் புகார்களை நிரூபிக்க முடியாது. இந்த புகார்கள், அவருக்குத்தான் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். நான் அவரை போல பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை. உங்கள் தந்தை ராஜீவ் காந்தியை பெரிய நல்லவர் போல காங்கிரஸ் சித்தரித்தது. ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் தந்தை ஒரு ஊழல்வாதியாக உயிரிழந்தார்" என்று மோடி கூறியிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து தற்போது டிவிட் செய்துள்ளார். அதில், "மோடி ஜி இந்த போர் முடிந்துவிட்டது. மே மாதம் 23 -ஆம் தேதிக்கு பிறகு உங்களுக்கான கர்ம பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள். உங்களை பற்றிய உங்களது சொந்த கருத்துக்களை என் தந்தை மீது திணிக்கிறீர்கள், அது உங்களை எப்போதும் காக்க போவதில்லை" என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close