டெல்லியில் கெஜ்ரிவாலை தாக்கிய நபர் யார் தெரியுமா?

  முத்துமாரி   | Last Modified : 05 May, 2019 03:48 pm
aap-supporter-slapped-arvind-kejriwal-as-he-was-dissatisfied-with-party-leaders-police

டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய நபர் யார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மக்களவை தேர்தலையொட்டி, நேற்று டெல்லி வடக்கு தொகுதியில் தனது கட்சி வேட்பாளர் பிரிஜேஷ் கோயலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது பிரச்சாரத்தின் இடையே, சிகப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர், நேராக வந்து அரவிந்த் கெஜ்ரிவாலை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். 

இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள், உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபரின் பெயர் சுரேஷ்(33) என்பது தெரியவந்துள்ளது. 

இவர் கெஜ்ரிவாலை தாக்கியது இது முதல் முறை அல்ல. முன்னதாக கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தூவியதும், இங்க் அடித்ததும் இந்த சுரேஷ் தான். இவர் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினர் என்பது மற்றொரு அதிர்ச்சி தகவல்.

 பல்வேறு இடங்களில் நடைபெறும் ஆம் ஆத்மி கட்சி பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். ஆனால் தற்போது அக்கட்சித்  தலைவர்கள் நடத்தைகள் பிடிக்கவில்லை என்று அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், சுரேஷ் மீது யாரும் புகார் கொடுக்காததால் அவர் மீது போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close