மேற்கு வங்கத்தில் பா.ஜ., வேட்பாளர் மீது தாக்குதல்

  Newstm Desk   | Last Modified : 06 May, 2019 09:04 am
attack-on-bjp-canditate-at-west-bengal

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடிக்கு வந்த பா.ஜ., வேட்பாளர் அர்ஜுன் சிங்கை, திரிணமுல் காங்கிரசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மக்களவை தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு, மேற்கு வங்கத்தில் உள்ள பராக்பூர் தொகுதியில் இன்று காலை வழக்கம் போல் துவங்கியது. காலை முதலே அதிக அளவிலான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்க துவங்கினர். 

இந்நிலையில், பா.ஜ., சார்பில் போட்டியிடும், அர்ஜுன் சிங், வாக்குச் சாவடிக்கு வந்த போது, அங்கிருந்த திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், அர்ஜுன் சிங்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து, அங்கிருந்த பா.ஜ., தொண்டர்களுக்கும், திரிணமுல் காங்கிரசாருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. அங்கு காவலில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார், அவர்களை அப்புறப்படுத்தினர்.  இதனால், அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் காணப்பட்டது. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close