புல்வாமாவில் வாக்குப்பதிவு விறுவிறு 

  Newstm Desk   | Last Modified : 06 May, 2019 09:22 am
many-voters-are-waiting-in-line-for-caste-their-vote-in-pulwama

ஜம்மு - காஷ்மீரில் மாநிலம் புல்வாமாவில், மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலையும் மீறி, வாக்களர்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். 

மக்களவை தேர்தலுக்கான, 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது. ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த தொகுதிகளில் ஒன்றான அனந்த்நாக் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட புல்வாமா பகுதியில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலையும் மீறி, வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். புல்வாமாவில் தான், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் காெல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அந்த பகுதி வாக்காளர்கள் பயங்கரவாதிகளுக்கு சவால் விடும் வகையில், தைரியமாக வாக்களித்து வருவது பாராட்டத்தக்கது என, தேர்தல் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close