வாக்குச்சாவடியை கைப்பற்றும் காங்கிரசார்: ஸ்மிருதி இரானி அதிர்ச்சி வீடியோ வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 06 May, 2019 12:15 pm
booth-capturing-of-congress-goes-worst-smiriti-slams-rahul


அமேதி தொகுதியில், வாக்குச்சாவடி அதிகாரிகளின் துணையுடன், காங்கிரசார் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி, வாக்காளர்களை கட்டாயப்படுத்தி, காங்கிரஸ் கட்சி சின்னத்திற்கு வாக்களிக்க வைப்பதாகவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, தன்னை கட்டாயப்படுத்தி, காங்கிரஸ் வேட்பாளர் ராகுலுக்கு வாக்களிக்க வைத்ததாக மூதாட்டி கதறும் வீடியோவையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

உத்தர பிரதேச மாநிலம் அமேதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் மீண்டும் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இம்முறையும் பா.ஜ., சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். 

இம்முறை, அமேதியில் ராகுலுக்கு, ஸ்மிருதி கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார் என கருத்து கணிப்புகளில் தெரிய வந்தால், ராகுல், கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில், அமேதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

— Chowkidar Vivek Maheshwari (@im_VMaheshwari) May 6, 2019

இதற்கிடையே, அமேதி தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில், வயதானவர்களுக்கு உதவும் போர்வையில் நிற்கும் காங்கிரஸ் தொண்டர்கள், அவர்களை கட்டாயப்படுத்தி, ராகுலுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்தில் வாக்களிக்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது. 

இது குறித்து வாக்களித்துவிட்டு வெளியே வந்த மூதாட்டி ஒருவர், வாக்குச்சாவடியில் தன்னை கட்டாயப்படுத்தி, கை சின்னத்திற்கு வாக்களிக்க வைத்ததாக தெரிவித்துள்ளார். தான் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க எண்ணியதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி, தன் விரலை கை சின்னத்தில் அழுத்தி வாக்களிக்க வைத்ததாகவும் புகார் தெரிவித்துள்ளார். 

இதற்கு, தேர்தல் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். இப்படிப்பட்ட வேட்பாளரைத் தான் தாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிப்பர் என, ஸ்மிருதி இரானி, ராகுலுக்கு எதிராக டுவிட் செய்துள்ளார். 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close