தெய்வத்தின் பெயரை ‛தீதீ’யால் கேட்கமுடியவில்லை: பிரதமர் மாேடி கடும் தாக்கு

  Newstm Desk   | Last Modified : 06 May, 2019 04:12 pm
didi-is-so-frustrated-these-days-that-she-doesn-t-even-want-to-talk-or-hear-about-god-pm-modi

''மேற்கு வங்க மாநிலத்தில், கடவுளின் பெயர் சொல்வோர் எல்லாம் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். முதல்வர் மம்தா கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். அவரால், கடவுள் பெயரைக் கூட கேட்க முடியவில்லை'' என, பிரதமர் நரேந்திர மாேடி பேசினார். 

மக்களவை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்க மாநிலம், தம்லுக் மக்களவை தொகுதியில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த, பிரதர் மாேடி பேசியதாவது: ‛‛மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடும் மன உளைச்சலில் உள்ளார். ஆட்சி அதிகாரம் அவர் கையை விட்டு போகக்போகிறதே என்பதை நினைத்து அவர் அஞ்சுகிறார்.

கடவுளின் பெயரைக் கூட அவரால் கேட்க முடியவில்லை. தெய்வத்தின் பெயர் சொல்பவர்களை எல்லாம் தீதீ சிறையில் அடைத்து சித்ரவதை செய்கிறார். ஜெய் ஸ்ரீராம் என, கடவுளின் பெயரை உச்சரிக்ககும் ஒவ்வொருவரும் கைது செய்யப்படுகின்றனர். அந்த அளவுக்கு கொடுமையான ஆட்சி நடக்கிறது. மே 23ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளுக்குப் பின், முதல்வர் மம்தா மேலும் சினம் அடைவார்’’இவ்வாறு அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close