சிறப்பு வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்த காஷ்மீர் பண்டிட்டுகள்

  Newstm Desk   | Last Modified : 06 May, 2019 03:57 pm
kashmiri-pandits-cast-their-votes-at-a-special-polling-station-in-udhampur-for-anantnag-parliamentary-constituency

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் , மக்களவை தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவில், அனந்த்நாக் தாெகுதியை சேர்ந்த வாக்காளர்களான காஷ்மீர் பண்டிட்டுகள், உதம்பூரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தனர். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பூர்வகுடிகளான காஷ்மீர் பண்டிட்டுகள், சில ஆண்டுகளுக்கு, அங்குள்ள முஸ்லிம்களால் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அங்கு ஏற்பட்ட கலவரத்தால், காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட்டுகள், டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர். 

அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் பிற பகுதிகளில் வசித்த பண்டிட்டுகளில் சிலர், ஜம்முவில் குடியேறியுள்ளனர். எனினும், அவர்களால் இன்னமும் காஷ்மீருக்குள் நுழைய முடிவதில்லை. 

எவ்வளவுதான் போலீஸ் பாதுகாப்பு கிடைத்தாலும், காஷ்மீருக்கள் மீண்டும் குடியேறினால், தங்கள் உயிருக்கு ஆபத்து நேருமாே என்ற அச்சத்தில், அவர்கள் ஜம்முவிலேயே வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள அனந்த்நாக் மக்களவை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்களனா காஷ்மீர் பண்டிட்டுகள், வாக்களிப்பதற்காக காஷ்மீர் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. 

எனவே, காஷ்மீர் பண்டிட்டுகளின் வசதிக்காக, ஜம்மு பகுதிக்குட்பட்ட உதம்பூரில், சிறப்பு வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், காஷ்மீர் பண்டிட்டுகள் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close