இன்றைய தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 06 May, 2019 08:19 pm
total-voter-turnout-in-phase-5-of-loksabha-election

மக்களவைக்கு இன்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட தேர்தலில் மொத்தம் 62.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில், 51 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று ஐந்தாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் 62.56 % வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்னர் கடந்த மாதம் 29 -ஆம் தேதி நடைபெற்ற நான்காம்கட்ட வாக்குப்பதிவில் 65.5 % வாக்குகள் பதிவாகின. 

மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் இதுவரை ஐந்து கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதில், இன்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட தேர்தலில்தான் மிகக் குறைந்த அளவாக 62.56 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close