சாமியார்களுடன் பூஜையில் இறங்கிய காங்கிரஸ் வேட்பாளர்!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2019 02:28 pm
congress-leader-digvijaya-singh-performs-pooja-in-the-presence-of-computer-baba

போபால் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்,  கம்ப்யூட்டர் பாபா தலைமையிலான சாமியார்களுடன் சிறப்பு யாகத்தில் பங்கேற்றார். 

மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில், அந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில், பெண் சாது பிரக்யா களம் இறங்குகிறார். இவர்கள் இருவரிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, திக்விஜய் சிங் பல்வேறு பூஜைகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, போபாலில், பிரபல சாமியார் கம்ப்யூட்டர் பாபா தலைமையில், பல்வேறு சாமியார்கள் அடங்கிய குழுவினரை வைத்து சிறப்பு யாகம் செய்தார். பின், அவர்களை, தனக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் படியும் கேட்டுக்கொண்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close