பிரியங்கா, ராகுலின் பிரசாரம் பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும்: கெஜ்ரிவால் குமுறல்

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 02:33 pm
priyanka-is-doing-rallies-in-up-against-sp-bsp-and-doing-rallies-in-delhi-against-aap

‛‛காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர், உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் முறையே, சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி மற்றும் ஆம் ஆத்மிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். இது, தேர்தலில் பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது’’ என, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குமுறியுள்ளார். 

இது குறித்து, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ‛‛காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் அவரது சகோதரி பிரியங்கா ஆகியோர், உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பிரசாரம் செய்வதில்லை. 

இருவரும், உ.பி.,யில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு எதிராகவும், டெல்லியில், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும் பிரசாரம் செய்து வருகின்றனர். இது, பா.ஜ.,வுக்கு சாதகமாக முடிய வாய்ப்புள்ளது. காங்கிரஸ் தலைவர்கள், இப்படி நேரத்தை வீணடிப்பதால், அவர்களுக்கும் பலனில்லை, பா.ஜ., ஆட்சியை அகற்ற நினைக்கும் கட்சிகளுக்கும் பலனில்லை’’ இவ்வாறு அவர் பேசினார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close