‛மோடி வாழ்க’ கோஷமிட்டோர் மீது வழக்குப் பதிவு

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 02:46 pm
fir-registered-after-a-group-of-people-raised-modi-slogans-in-congress-candidate-digvijaya-singh-s-roadshow-in-bhopal

மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் பங்கேற்ற தேர்தல் பிரசார பேரணியில், பிரதமர் மாேடியை வாழ்த்தி கோஷமிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் போபால் மக்களவை  தொகுதியில், காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். அரவை எதிர்த்து, பா.ஜ., சார்பில் சாத்வி பிரக்யா களம் இறக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், கம்ப்யூட்டர் பாபா தலைமையில், யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு வரும் திக்விஜய் சிங், காங்., தொண்டர்களுடன், போபால் நகர வீதிகளில் பேரணியாக சென்றார். அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த சிலர் பிரதமர் மாேடிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். ‛மாேடி வாழ்க’ என கோஷமிட்டனர். 

இதையடுத்து, மாேடியை வாழ்த்தி கோஷமிட்டோருக்கு எதிராக, மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close