நாடு முழுவதும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது: பிரதமர் மாேடி 

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 05:02 pm
bjp-will-win-more-seats-than-2014-election-pm-modi

‛‛நாட்டின், 17வது மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரிய வெற்றி பெறும். 2014ம் ஆண்டு தேர்தல் முடிவுகளில் பெற்ற வெற்றியை விட இந்த வெற்றி மிகப் பெரியதாக இருக்கும். அதே போல், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணிக்கும் அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும்’’ என, பிரதமர் நரேந்திர மாேடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இது குறித்து, தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, பிரதமர் நரேந்திர மாேடி அளித்த பேட்டியில் கூறியதாவது: ‛‛நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் முடிவுகள், பா.ஜ.,வுக்கு சாதகமாகவே அமையும். முதல் முறையாக, நாடு முழுவதும் ஆளும் கட்சிக்கு ஆதரவான அலை பலமாக வீசுவதை பார்க்கிறேன். 

பா.ஜ., அரசு செய்த மக்கள் நலத்திட்டங்கள் பற்றி வாக்காளர்கள் நன்கு அறிந்துள்ளனர். எனவே, கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும். அது மட்டுமின்றி, தேசிய ஜனதாய கூட்டணிக்கும் முன்பை விட கூடுதல் இடங்களில் வெற்றி கிடைக்கும். எங்கள் கட்சியின் வாக்கு வங்கி சதவீதமும் அதிகரிக்கும்’’ என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close